09 December 2014

Skanda Puranam..

During Skanda Shashti its auspicious to listen to "Skanda Puranam" - Skanda Puranam in Sanskrit is one of the largest puranams and Kachiappa Devar composed this in Tamil. He was an archakar at Kumarakottam temple at Kanchi and the starting words of Kandapuranam in tamil was initiated by Lord Muruga himself! (‘திகட சக்கர’). Everyday he composed 100 songs and used to leave the manuscripts at his feet, and Murugan used to review it and made corrections!

 Very powerful lyrics, here are some amazing poems. The first one gives a graphical description of how Murugan's avatharam came to be :

"அருவமும் உருவமாகி அனாதியாய்ப் பலவாயொன்றாய்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணை கூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய"

"மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல்
நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி
அறிமுக வுருவாய்த் தோன்றி அருளோடு சரவணத்தில்
வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளினானே "

"ஏலவார்குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலனாகும் குமரவேள் நடுவுறும் பான்மை
ஞாலமேல் உறும் இரவோடு பகலுக்கும்
மாலையான தொன்று அழிவின்றி நிற்குமாறெங்கும்"

இவ்வண்ணம் பாலகனாய்த் தோன்றிய முருகனை இறைவனும் இறைவியும் எடுத்துப் பாலூட்டித் தம்பக்கத்தில் இருத்தினார்கள். அவ்வண்ணம் எழுந்தருளிய மூர்த்தமே சோமஸ்கந்த மூர்த்தமாக அமைந்துள்ளது.

தெய்வீகச் சிறப்புடன் விளங்கும் முருகப் பெருமான் இறைவனிடமும் இறைவியிடமும் தலைமைத்துவத்தைப் பெற்று ஞான சக்தியாகிய வேற்படைக் கலத்தையும் அம்பிகையிடம் பெற்று சூரனை வதம் செய்து அருளினார்.

“முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்

No comments:

Post a Comment